கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 115 டாலரைத் தாண்டியபோதும் , இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏற்றம் கண்டது.
இருப்பினும், டாலர் மதிப்பு வலுப்பெற்றதால் இந்த விலை உயர்வு பெரிய அளவில் இல்லை. ஸ்பாட் தங்கம் ஒரு அவுன்ஸ் 4,650 டாலருக்கு மேல் நிலையாக வர்த்தகமான நிலையில், ஸ்பாட் வெள்ளி ஒரு அவுன்ஸ் 72.7 டாலரைத் தாண்டியது.MCX சந்தையில், தங்கத்தின் விலை சிறிய லாபத்துடன் ரூ.1.50 லட்சத்தைத் தாண்டி வர்த்தகமானது. MCX வெள்ளி கிலோவுக்கு ரூ.700-க்கு மேல் உயர்ந்து, ரூ.2.34 லட்சத்தைத் தாண்டி விற்பனையானது. மறுபுறம், 24 காரட், 22 காரட் மற்றும் 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்தது.
10 கிராம் 24 காரட் தங்கம் ரூ.820 குறைந்து, ரூ.1.50 லட்சத்திற்கும் கீழ் உள்ளது. அதே சமயம், ஆபரண வெள்ளி விலை மூன்றாவது நாளாக எந்த மாற்றமும் இன்றி நீடிக்கிறது.புதன்கிழமை ரிசர்வ் வங்கி வட்டி விகிதம் குறித்த முடிவை அறிவிக்க உள்ள நிலையில், இந்த விலை மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. டிரேடிங் எகனாமிக்ஸ் தரவுகளின்படி, தனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் ஈரானின் உள்கட்டமைப்புகளைத் தாக்குவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த மிரட்டல், முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது, போர் நீடித்தால் ஏற்படும் பொருளாதார பாதிப்புகள் குறித்த கவலையை அதிகரித்துள்ளது.செவ்வாய்க்கிழமை இரவுக்குள் (அமெரிக்க நேரப்படி) ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது உள்ளிட்ட நிபந்தனைகளுக்கு ஈரான் ஒப்புக் கொள்ளாவிட்டால், அந்நாட்டின் மின் நிலையங்கள் மற்றும் பாலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என டிரம்ப் எச்சரித்துள்ளார்.
மத்தியஸ்தர்கள் மூலம் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வெளியான தகவல்களை இந்த மிரட்டல் பின்னுக்குத் தள்ளியுள்ளது.தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!ஈரான் போர் காரணமாக எரிசக்தி விலைகள் கடுமையாக உயர்ந்து, பணவீக்க அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இந்த மோதல் தொடங்கியதிலிருந்து தங்கம் விலை சுமார் 12% சரிந்துள்ளது. மேலும், மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களைக் குறைப்பதைத் தாமதப்படுத்தலாம் அல்லது உயர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பையும் இது அதிகரித்துள்ளது. முன்னதாக, இந்த ஆண்டு இரண்டு முறை வட்டி விகிதங்கள் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அமெரிக்க பெடரல் ரிசர்வ் ஆண்டு முழுவதும் வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யாது என சந்தைகள் எதிர்பார்க்கின்றன.
