2026-ஆம் ஆண்டு, பயணம் என்பது வெறும் இடங்களைக் குறித்து வைக்கும் ஒரு விஷயமாக மட்டும் இருக்கப்போவதில்லை.
நாம் எப்படி, ஏன் பயணம் செய்கிறோம் என்பதுதான் முக்கியம். கண்டங்கள் தாண்டி சூரிய கிரகணங்களைத் துரத்துவது முதல், மனித உருவம் கொண்ட ரோபோக்களால் நிர்வகிக்கப்படும் வீடுகளில் தங்குவது வரை, பயணம் என்பது முன்னெப்போதும் இல்லாத அளவு குறிக்கோள் கொண்டதாகவும், தொழில்நுட்பம் சார்ந்ததாகவும் மாறி வருகிறது. அப்படி ட்ரெட்டிங்கில் உள்ள பயண அனுபவங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
வான்வெளி சுற்றுலா
வான்வெளி சுற்றுலா என்பது இப்போது ஒரு சிறு பிரிவாக மட்டுமல்லாமல், அனைவரின் வாழ்நாள் பயணப் பட்டியலில் இடம்பிடிக்கும் முக்கிய அம்சமாக மாறி வருகிறது. குறைவான ஒளி மாசு கொண்ட இடங்களான பாலைவன முகாம்கள் மற்றும் தொலைதூர நோர்டிக் (Nordic) தங்குமிடங்களுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது ஒருபுறம் அறிவியலையும், மறுபுறம் ஆன்மீகத்தையும் உள்ளடக்கிய ஒரு அற்புதமான அனுபவமாகும். வானத்தை வெறும் பின்னணியாகப் பார்க்காமல், பயணத்தின் முதன்மை ஈர்ப்பாக மாற்றும் இந்த புதிய போக்கு, பயணிகளுக்கு வியக்கத்தக்க அனுபவத்தைத் தருகிறது.
விருந்தோம்பலில் புதிய புரட்சி
ஹோட்டல்கள் முன்பை விட புத்திசாலித்தனமாகவும், மனிதத்தன்மை கொண்டவையாகவும் மாறி வருகின்றன. மனித உருவம் கொண்ட ரோபோக்கள் மற்றும் ஏ.ஐ உதவியாளர்கள் தற்போது செக்-இன், ரூம் சர்வீஸ் மற்றும் சுற்றுலா ஆலோசனைகளை வழங்கும் பொறுப்புகளை ஏற்கத் தொடங்கியுள்ளன. இந்த “ஹியூமனாய்டு வீடுகள்”, தானியங்கி வசதியையும் தனிப்பட்ட கவனிப்பையும் ஒன்றாக இணைக்கின்றன. இவை விருந்தினர்களின் விருப்பங்களை நினைவில் வைத்துக்கொண்டு, அதற்கேற்ப சூழலை உடனடியாக மாற்றியமைக்கின்றன.
சோலோ டிராவல்
தற்போது பயணிகள் பெரும்பாலும் சோலோ டிராவல் செய்வதையே அதிக அளவில் பரிந்துரைத்து வருகின்றனர். 2026-ஆம் ஆண்டில், பயணிகள் குறைந்த இடங்களையே தேர்வு செய்கிறார்கள். ஆனால் நீண்ட காலம் அங்கேயே தங்குகிறார்கள். நிதானமான பயணம் என்பது ஆழமான அனுபவங்கள், உள்ளூர் கைவினைப் பொருட்களைக் கற்றுக்கொள்வது, அந்தந்த பிராந்தியத்திற்குரிய உணவுகளைச் சுவைப்பது மற்றும் மக்களுடன் பிணைப்பை உருவாக்குவது ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
கூட்டம் குறைவாக இருக்கும் சுற்றுலாத் தலம்
மக்கள் அதிகம் கூடும் சுற்றுலாத் தலங்கள் இப்போது தங்கள் கவர்ச்சியை இழந்து வருகின்றன. சுற்றுலாப் பயணிகள் கூட்டம் இல்லாத, அதே சமயம் உண்மையான அனுபவத்தைத் தரும் ஹிட்டன் ஸ்பாட்களை தேடிச் செல்கின்றனர். மறைந்திருக்கும் கிராமங்கள் முதல் தீண்டப்படாத கடற்கரைகள் வரை, புதியவற்றைக் கண்டுபிடிப்பதிலேயே பயணத்தின் சுவாரஸ்யம் அடங்கியுள்ளது. சமூக ஊடகங்களில் பகிரப்படும் படங்களுக்காக மட்டும் பயணம் செய்யாமல் மனதிற்கு நெருக்கமான, உண்மையான அனுபவங்களைத் தரும் இடங்களைத் தேடும் போக்கு மக்களிடையே அதிகரித்துள்ளது.
