“12 மாவட்டங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது: வானிலை மையம் வெளியிட்ட எச்சரிக்கை”

இன்று (04-10-2025) வானிலை மையம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், கடந்த (03-10-2025) அன்று வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஏற்பட்ட சக்தி புயல், இன்று காலை அதே பகுதிகளில் தீவிர புயலாக மாறி, வடமேற்கும் அதன் அருகிலுள்ள வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவுகின்றது. இந்த புயல் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து, வடமேற்கு மற்றும் மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர், அது கிழக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழக்கும் வாய்ப்பு உள்ளது.

இது தவிர, தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும், பரபரப்பான வானிலை மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

Exit mobile version