பூண்டி ஏரியில் இருந்து நீர் வெளியேற்றம் அதிகரிப்பு: கொசஸ்தலை ஆற்றங்கரையில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழையால் பூண்டி ஏரியில் நீர் திறப்பு உயர்வு – கொசஸ்தலை ஆற்றங்கரையில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருவள்ளூர்: வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களுள் ஒன்றான பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதன் விளைவாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூண்டி ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் உபரிநீர் வெளியேற்றப்படுவது அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏரியின் மொத்த நீர்மட்டம் 35 அடி ஆகும். தொடர் மழையால் ஏரியின் நீர்மட்டம் 33 அடியை நெருங்கியுள்ளது.

ஏரியின் பாதுகாப்பு கருதி, உபரி நீர் திறப்பு தற்போது விநாடிக்கு 4,000 கன அடியில் இருந்து 7,000 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

எனவே, பூண்டி ஏரியின் உபரிநீர் வெளியேறும் கொசஸ்தலை ஆற்றின் இரு கரைகள் மற்றும் உபரிநீர் கால்வாய் ஓரங்களில் அமைந்துள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Exit mobile version