சென்னையில், கடந்த 26ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது, அது பின்னர் “மோந்தா” புயலாக வலுப்பெற்றது. தற்போது, இந்த புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மசூலிபட்டினத்திலிருந்து தென்கிழக்கே 160 கி.மீ. தொலைவிலுள்ளது. புயல் கரையை கடக்கும் போது, 90 முதல் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், கடல் புயல் காரணமாக பல்வேறு இடங்களில் உயர்ந்த அலைகள் காணப்படுவதாகவும், காக்கிநாடா துறைமுகத்தில் 10ம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. விசாகப்பட்டினம், கங்காவரம் மற்றும் மசூலிப்பட்டினம் ஆகிய துறைமுகங்களிலும், அதற்கான பாதுகாப்பு எச்சரிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மோந்தா புயலின் காரணமாக, சென்னை மற்றும் பிற பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்துள்ளது. சென்னையில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மற்றும் புதுவை பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்தில் இடிமின்னலுடன் கூடிய மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
புயல் காரணமாக, சென்னையில் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்றும், கடந்த 24 மணி நேரத்தில் எண்ணூரில் 12 செ.மீ., கத்திவாக்கத்தில் 9.5 செ.மீ., விம்கோ நகரில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
இதனிடையே, சென்னையில் நிலவும் புயல் காரணமாக, இன்று சென்னையில் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், இன்று அந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
என்றாலும், கல்லூரிகள் வழக்கமாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
