சியோல் / ஜியாங்ஜு:
தென் கொரியாவின் ஜியாங்ஜு நகரில் நடக்கவுள்ள ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் (APEC) உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அங்கு சென்றுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், இன்று (அக்.30) சீன அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்தித்துப் பேசினார்.

முக்கிய அறிவிப்பு: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, அதிபர் டிரம்ப், சீனா மீதான வரி விதிப்பை 57 சதவீதத்தில் இருந்து 47 சதவீதமாகக் குறைப்பதாக அறிவித்தார். இதன்மூலம், அமெரிக்கா விதித்த வரியில் 10 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இரு தலைவர்களும் நேரில் சந்தித்துப் பேசுவது, அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான வர்த்தகப் போர் மற்றும் வரிவிதிப்பு தொடர்பான பதற்றங்களைத் தணிக்கும் வகையில் அமைந்ததால், இச்சந்திப்பு உலக அளவில் முக்கியத்துவம் பெறுகிறது.