கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை

மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

பலரும் வங்கிகள் அளிக்கும் கிரெடிட் கார்டுகளை வாங்கிப் பயன்படுத்தி வந்தாலும் அவற்றில் இருக்கும் சில குறைபாடுகளால், சிலர் அதனை வாங்கவே தயக்கம் காட்டுகிறார்கள். அப்படியே கிரெடிட் கார்டு வாங்கி அதில் பெரிய தொகையை செலவழித்துவிட்டு, திரும்ப செலுத்த முடியாமல் சிக்கிக் கொண்டால் அவ்வளவுதான். ஒருவாறு சமாளித்து பணத்தைக் கட்டி அந்த கிரெடிட் கார்டை ரத்து செய்ய நினைத்தால் கனவிலும் நடக்காது என்பது போல வங்கிகள் நடந்து கொள்ளும். ஆனால், இந்த தொல்லைகள் இனி இல்லை என்பது போல, ஆர்.பி.ஐ. புதிய வழிமுறைகளை விதித்துள்ளது.

கட்டண விதிப்பில் வெளிப்படைத்தன்மை, வட்டி கணக்கீட்டில் நேரடித்தன்மை, தாமதக் கட்டணம், கிரெடிட் கார்டின் அதிகபட்சக் கடன் அளவை தீர்மானிப்பது, கார்டை ரத்து செய்ய கால அளவு நிர்ணயிப்பது போன்றவற்றுக்கு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன

அண்மைக்காலமாக கிரெடிட் கார்டு வழங்கும் நிதி நிறுவனங்கள், கிரெடிட் அட்டையை அதிகாரப்பூர்வமில்லாமல் ஆக்டிவ் செய்வது, கிரெடிட் தொகையை அதிகரிப்பது, மறைமுக வட்டி விதிப்பு, கார்டை ரத்து செய்வதற்கான காலத்தை நீட்டிப்பது, பணத்தை திரும்ப செலுத்துவதில் தாமதம் போன்றவை குறித்து புகார்கள் அதிகரித்து வந்த நிலையில் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.ஆர்.பி.ஐ. புதிய விதிமுறைகளின்படி.. கிரெடிட் கார்டு ஆக்டிவேஷன்: முன்பு தானாகவே ஆக்டிவ் ஆகும் – இனி உரிய அனுமதி பெற்றே ஆக்டிவ் செய்யப்படும். 

Exit mobile version