13/nov/2025 கடந்த 30 ஆண்டுகளில் இயற்கை பேரழிவுகளால் மிகுந்த பாதிப்பைச் சுமந்த நாடுகளில் டொமினிகா முன்னணி
பெலெம், ஐ.நா. பருவநிலை மாற்ற மாநாடு (COP 30) பிரேசிலின் அமேசான் பகுதியில் உள்ள பெலெம் நகரில் தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டில், சுற்றுச்சூழல் ஆய்வு அமைப்பு “ஜெர்மன்வாட்ச்” உலகளாவிய காலநிலை ஆபத்து குறியீட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி, 1995-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரை 9,700-க்கும் மேற்பட்ட தீவிர இயற்கை பேரழிவுகள் உலகைத் தாக்கியுள்ளன, இதனால் 8.3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த வகையான பேரிடர்களில், வெள்ளம், புயல், வறட்சி மற்றும் வெப்ப அலைகள் முக்கியமாக பாதிப்புகளை உருவாக்கியுள்ளன. உலகளாவிய வெப்பமயமாதலின் தாக்கத்துடன் இந்த இயற்கை பேரிடர்கள் மேலும் தீவிரமாக மாறியுள்ளன.
இந்த நிலையில், கடந்த 30 ஆண்டுகளில் இயற்கை பேரழிவுகளால் மிகுந்த பாதிப்பை அனுபவித்த நாடுகளில் டொமினிகா முன்னணி இடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து மியான்மர், ஹோண்டுராஸ், லிபியா, ஹைட்டி, கிரெனடா, பிலிப்பைன்ஸ், நிகரகுவா, பஹாமாஸ் மற்றும் இந்தியா இடம் பெற்றுள்ளன.
இந்த காலத்தில், இந்தியா 9-வது இடத்தில் உள்ளது. 430 இயற்கை பேரிடர்களில் சிக்கிய இந்தியாவில் 80,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 1995 முதல் 2024 வரை உலகளவில் 130 கோடி மக்கள் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ரூ.15,000 கோடி மதிப்பிலான பொருளாதார நஷ்டங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய சம்பவங்களில், 1998-ஆம் ஆண்டு குஜராத் புயல், 1999-ஆம் ஆண்டு ஒடிசா சூப்பர் புயல், 2013-ஆம் ஆண்டு உத்தர காங்கட் வெள்ளப்பெருக்குகள் ஆகியவை மிகுந்த உயிரிழப்புகளை ஏற்படுத்தின.
மேலும், 2024 ஆம் ஆண்டில் குஜராத், மராத்தி மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் கனமழை மற்றும் வெள்ளம் மூலம் 80 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதையும், அதனை மீறி சில பகுதிகளில் பெரும் பொருளாதார சேதங்கள் ஏற்பட்டுள்ளன.




























