Featured
FeaturedListஇந்தியாசெய்திகள்தமிழகம்

மேகதாது அணைத் திட்ட அறிக்கை நிராகரிப்பு : வெளியான முக்கியத் தகவல்!

https://www.dailythanthi.com/news/india/helicopter-facility-for-vijay-to-visit-cauvery-dams-dk-sivakumar

மேகதாதுவில் அணை கட்டுவதற்கான திட்ட வரைவு அறிக்கையைக் கர்நாடக அரசு அறிக்கை காவேரி நீர் மேலாண்மை ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இது குறித்து இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் தங்களிடம் இல்லை என்பதால், அதனை மத்திய நீர் ஆணையத்துக்கு அனுப்பியிருந்தது. இத்தகைய சூழலில் தான் பூவுலகின் நண்பர்கள் அமைப்பானது  தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் மேகதாது அணைத் திட்ட அறிக்கை தொடர்பாக மத்திய அரசுக்குக் கேள்விகளை எழுப்பியிருந்தது.

அதற்கு அளிக்கப்பட்ட பதிலில் கர்நாடக அரசு தாக்கல் செய்த மேகதாது அணைத் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை நிராகரிக்கப்பட்டுக் கடந்த ஏப்ரல் மாதமே திருப்பி அனுப்பப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, காவேரி ஆற்றின் நீரை அதிக அளவில் பயன்படுத்தும் வகையில் இந்தத் திட்டம் அமைந்துள்ளதால், திட்ட அறிக்கையில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாகக் கூறி அதைத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அணையின் நீர்த் தேக்கத் திறன் தொடர்பான கணக்கீடுகள் முறையாகச் செய்யப்படவில்லை என்பது உள்ளிட்ட இரு முக்கிய காரணங்களால் அறிக்கை ஏற்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்ட அதனை ஆய்வு செய்த மத்திய நீர் ஆணையம், தேவையான தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் விளக்கங்கள் முழுமையாக வழங்கப்படவில்லை என்று கூறி, கூடுதல் தகவல்களுடன் மீண்டும் சமர்ப்பிக்குமாறு கர்நாடக அரசுக்கு அறிவித்துள்ளது. தேவையான திருத்தங்கள் செய்யப்பட்ட பிறகே அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் தேவையான திருத்தங்களுடன் மீண்டும் இதற்கான அறிக்கையைத் தயாரித்துச் சமர்ப்பிப்போம் எனக் கர்நாடக அரசு தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

What's your reaction?

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *