Featured
Featuredஅரசியல்இந்தியாசெய்திகள்தமிழகம்

2021 ல் நடந்த சம்பவம்.. உங்க லட்சணம், துரோகம் மக்களுக்கு தெரியும் – ஓபிஎஸுக்கு ஆர்.பி. உதயகுமார் பதிலடி!

தேனி மாவட்டத்தில் 2021சட்டமன்றத் தேர்தலில் எத்தனை தொகுதிகள் நீங்கள் வெற்றி பெற்று தந்தீர்கள் என்று மக்களிடத்தில் கூறினால் உங்கள் லட்சணம், துரோகம் மக்களுக்கு தெரியும் என ஆர்.பி உதயகுமார், பன்னீர்செல்வத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

மதுரை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர். பி. உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தொடர்ந்து வரலாற்றை திருத்தி ஒரு கோயம்பல்ஸ் பிரச்சாரத்தை பன்னீர்செல்வம் பேசி வருகிறார். பதவி சுகத்திற்காகவும் அதிகார பசிக்காகவும், ஸ்டாலினை புகழ் பாடி அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் பதவி பட்டங்களையும், அதிகார சுகத்திற்காக இதுபோன்று புகழ் பாடுவது பற்றி பேசுவது எங்களுக்கு கவலை இல்லை . ஆனால் பன்னீர்செல்வம் பதவி, பட்டம் பெறுவதற்கு அதிமுக வரலாற்றை திருத்தி கூறுகிறீர்கள். இன்றைக்கு அதிமுகவில் எந்த பதவி சுகத்தையும் எதிர்பார்க்காமல் தன் உயிர் போகும் வரை அதிமுக கொடி படர வேண்டும் என்ற இருக்கும் .அதிமுக தொண்டர்களின் எதிர்வினையை நீங்கள் எதிர்கொள்ள வேண்டும் .மதுரை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர். பி. உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தொடர்ந்து வரலாற்றை திருத்தி ஒரு கோயம்பல்ஸ் பிரச்சாரத்தை பன்னீர்செல்வம் பேசி வருகிறார். பதவி சுகத்திற்காகவும் அதிகார பசிக்காகவும், ஸ்டாலினை புகழ் பாடி அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் பதவி பட்டங்களையும், அதிகார சுகத்திற்காக இதுபோன்று புகழ் பாடுவது பற்றி பேசுவது எங்களுக்கு கவலை இல்லை . ஆனால் பன்னீர்செல்வம் பதவி, பட்டம் பெறுவதற்கு அதிமுக வரலாற்றை திருத்தி கூறுகிறீர்கள். இன்றைக்கு அதிமுகவில் எந்த பதவி சுகத்தையும் எதிர்பார்க்காமல் தன் உயிர் போகும் வரை அதிமுக கொடி படர வேண்டும் என்ற இருக்கும் .அதிமுக தொண்டர்களின் எதிர்வினையை நீங்கள் எதிர்கொள்ள வேண்டும் .

அதிமுகவில் கட்சி பதவியை அனுபவித்து கொண்டு இன்றைக்கு அதே அதிமுகவை அளிப்பேன் சபதம் ஏற்று ஊர் ஊராக ஊளையிடும் வரும் நீங்கள் என்னை பார்த்து என்ன தகுதி, யோகிதை உள்ளது என்று நீங்கள் பேசி உள்ளீர்கள் .எனக்கு என்ன தகுதி உள்ளதை ஆண்டவன் பார்த்துக் கொள்வான். புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் ஆன்மா பார்த்துக் கொண்டு வருகிறது. உங்களுக்கு உரிய பதிலை சொல்லும் .அதிமுகவை அழிப்பதற்கும், அடமான வைப்பதற்கும் நீங்கள் முயற்சி எடுத்து வந்தீர்கள்‌ அதை தடுத்து இன்றைக்கு அதிமுகவை உயிரோட்டமாக, மக்கள் செல்வாக்கு உடன் எடப்பாடியார் வழி நடத்தி வருகிறார் அவரைப் பற்றி பேச உங்களுக்கு என்ன அருகதை உள்ளது .

புரட்சித்தலைவி அம்மா தன் உடல்நிலை பற்றி கூட அக்கறைப்படாமல் தன் உயிரைக் கொடுத்து 234 தொகுதியிலும் பிரச்சாரம் செய்து வெற்றி வாகை சூடிய அம்மாவின் அரசை, அம்மா இறந்த பின்பு இந்த ஆட்சி தொடர வேண்டும் என்று எடப்பாடி யார் முயற்சித்தபோது அப்போது சட்டமன்றத்தில் அதற்கு எதிராகத்தான் நீங்கள் வாக்களித்து துரோகம் செய்தீர்கள். அதிமுக என்ற ஆலம் மரத்தின் வளர்ச்சிக்கு ஒரு செம்பு தண்ணீரை கூட நீங்கள் ஊற்றவில்லை தற்போது தேர்தலுக்கு முன் ஊர் ஊராக சென்று ஊளையிடும் நீங்கள் 2021 சட்டமன்ற தேர்தலில் மனசாட்சி தொட்டு சொல்லுங்கள் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்று எத்தனை தொகுதிகள் நீங்கள் பிரச்சாரம் செய்தீர்கள் .

What's your reaction?

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *