Reliance Intelligence அறிமுகம்: கூகுளுடன் இணைந்து AI தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னேறும்
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் தற்போது உலகின் முன்னணி டெக் நிறுவனங்களுக்கு புதிய போட்டியாக மாறியுள்ளதுடன், மெட்டா மற்றும் ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் பெரும் தொகை திறமையாளர்களை AI துறையில் பணியமர்த்திக் கொண்டு ஆர்வமுள்ளன.
இந்த பின்புலத்தில், இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனம், கூகுள் மற்றும் மெட்டா நிறுவனங்களுடன் இணைந்து ‘Reliance Intelligence’ என்ற புதிய தொழில்நுட்ப சந்தைப்படுத்தலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த துறையில், குறிப்பாக கல்வி, மருத்துவம் மற்றும் வேளாண்மை போன்ற துறைகளிலும் AI பயன்பாடுகளை விரிவாக்க திட்டம் உள்ளது.
இதற்குறித்து பேசிய ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி, “கூகுளுடன் எங்கள் நீண்டகால தொழில்நுட்ப கூட்டாண்மையை மேலும் பலப்படுத்தி, AI துறையில் பெரிய முயற்சியில் இறங்கவுள்ளோம். இந்த இணைப்பின் மூலம், இந்திய அளவில் செயற்கை நுண்ணறிவின் திறன்களை விரிவாக்கி, டெவலப்பர்களுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குவோம்” என்றார்.
மேலும், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை கூறியதாவது: “கூகுளின் கிளவுட் மற்றும் AI தொழில்நுட்பங்களை ரிலையன்ஸ் இணைந்து இந்தியாவின் பல்வேறு துறைகளில் பயன்படுத்தும் திட்டத்தில் ஒருங்கிணைந்து செயல்படுகிறோம். இது ரிலையன்ஸ் நிறுவனங்களின் அனைத்து துறைகளிலும் மாற்றங்களை கொண்டு வரும்.”
இந்த முயற்சி, ஜியோ நெட்வொர்க்கிலும் பல புதிய மாற்றங்களை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.