Meta அறிமுகப்படுத்திய புதிய Ray-Ban கண்ணாடி: மொபைல் இல்லாமல் அனைத்து வசதிகளும் – விலை என்ன?
மெட்டா நிறுவனம், செப்டம்பர் 17 அன்று தனது புதிய ரே-பான் கண்ணாடிகளை வெளியிட்டுள்ளது. இந்தக் கண்ணாடி, வலது லென்ஸில் டிஸ்ப்ளே வசதியைக் கொண்டு செயலிகள், செய்திகள், அறிவிப்புகள் மற்றும் திசைகள் போன்றவற்றை காட்டுகிறது.
இந்தக் கண்ணாடியின் கட்டுப்பாடு Meta Neural Band என்ற மணிக்கட்டுப் பட்டையின் மூலம் செய்யப்படுகிறது. இந்த பட்டை கடந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்டு, கையால் சில சைகைகள் செய்து கண்ணாடியை கட்டுப்படுத்த முடியும். இந்த பேண்ட் தண்ணீருக்கு பாதிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் ஒரு சார்ஜ் நிறைவு செய்யும் போது 18 மணி நேரம் செயல்படும்.
மெட்டாவின் வருடாந்திர நிகழ்வான Meta Connect 2025-இல் மார்க் சக்கர்பெர்க் இந்தக் கண்ணாடியை அறிமுகப்படுத்தினார். இந்தக் கண்ணாடியை அணிந்திருக்கும் போது, மொபைல் தேவையில்லை என்கின்றனர். கால் பேசுவதும், புகைப்படம் எடுப்பதும் மட்டுமின்றி, வாட்ஸ்-அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆப்களைப் பயன்படுத்த முடியும். புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பார்க்கவும், Meta AI Assistant வசதியை அணுகவும் முடியும்.
இந்தக் கண்ணாடி செப்டம்பர் 30 முதல் விற்பனைக்கு வரப்போகிறது. அதன் விலை 799 அமெரிக்க டாலர்கள் (அதாவது இந்திய மதிப்பில் 70,402 ரூபாய்) ஆகும். முதல் கட்டமாக, இந்தப் பொருள் அமெரிக்க சந்தையில் மட்டுமே கிடைக்கப்போகிறது.
இந்தக் கண்ணாடி Meta மென்பொருள் தளத்தில் இயங்கும் மற்றும் ஆப்பிள் போல, ஸ்மார்ட் போனுடன் பொருந்தாமலும் மெட்டாவின் ஈகோ சிஸ்டத்துக்குள் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ளது.