Featured
Featuredஅரசியல்செய்திகள்டெக்னாலஜிதமிழகம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று டிரோன்கள் பறக்க தடை

இன்று ஒரு நாள் முழுவதும் திருப்பத்தூர் மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது.

திருப்பத்தூர்,

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று (சனிக்கிழமை) திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தருகிறார். எனவே பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று ஒரு நாள் முழுவதும் திருப்பத்தூர் மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது.

தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்களை பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தகவலை கலெக்டர் சிவசவுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.

What's your reaction?

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *