Featured
Featuredஅரசியல்சினிமாசெய்திகள்

பவன் கல்யாணின் “உஸ்தாத் பகத் சிங்” படத்தின் டிரெய்லர் வெளியானது

ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிக்கும் ‘உஸ்தாத் பகத் சிங்’ படம் வரும் 19ம் தேதி வெளியாகிறது.

பவர் ஸ்டார் பவன் கல்யாண் அரசியல்வாதியும், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரும் ஆவார். இவர் தெலுங்கு சினிமாவில் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார்.ஆந்திர மாறில சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று துணை முதல்வராகவும் பொறுப்பில் உள்ளார்.

துணை முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு சில மாதங்களாக சினிமாவில் நடிப்பதை நிறுத்தி வைத்திருந்தார் பின்னர் தயாரிப்பாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு ஹரிஹர வீர மல்லு, ஓஜி ஆகிய படங்களில் நடித்திருந்தார். ‘ஓஜி’ படம் ரூ.350 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

மைத்ரி மூவி மேக்கரஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘உஸ்தாத் பகத்சிங்’ படத்தை ஹரிஷ் சங்கர் இயக்கியுள்ளார். 2012 ஆம் ஆண்டு வெளியான ‘கப்பர் சிங்’ படத்திற்குப் பிறகு பவன் கல்யாண் மற்றும் ஹரிஷ் சங்கர் கூட்டணியில் உருவாகி வரும் இரண்டாவது படம் இது. தேவிஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கதாநாயகிகளாக ஸ்ரீலீலா, ராஷி கண்ணா இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தில் பவன் கல்யாண் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். தணிக்கை வாரியம் ‘உஸ்தாத் பகத் சிங்’ படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.

இந்நிலையில், ‘உஸ்தாத் பகத் சிங்’ படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் வரும் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

What's your reaction?

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *