Featured
Featuredஅரசியல்செய்திகள்தமிழகம்

ரூ. 35 கோடிக்கு அண்ணா நகர் சொத்தை விற்றார் விஜய்: அடுத்தடுத்த சொத்துக்களையும் விற்கத் திட்டம்?

சென்னையின் முக்கிய பகுதியில் இருந்த சொத்து ஒன்றை ரூ. 35 கோடிக்கு விற்றுவிட்டார் விஜய் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. பெரும்பணக்காரரான விஜய் ஏன் சொத்தை விற்க வேண்டும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

விஜய் சொத்து: அரசியலுக்கு செல்வதால் இனி படங்களில் நடிப்பது இல்லை என்று முடிவு செய்திருக்கும் விஜய் தன் கடைசி படமான ஜனநாயகனுக்கு வாங்கிய சம்பளம் ரூ. 220 கோடி ஆகும். அதனால் தான் கெரியரின் உச்சத்தில் இருந்து வருகிறேன் என்று அவர் அவ்வப்போது பதிவு செய்து வருகிறார்.

சினிமாவில் கிடைத்த பணத்தை ரியல் எஸ்டேட்டில் அதிகம் முதலீடு செய்திருக்கிறார் விஜய் என்று ஆண்டுக் கணக்கில் பேசப்படுகிறது. இந்நிலையில் சென்னை அண்ணா நகர் பகுதியில் இருந்த சொத்து ஒன்றை கடந்த வாரம் விற்றிருக்கிறார் விஜய். அதன் மூலம் அவருக்கு ரூ. 35 கோடி கிடைத்திருப்பதாக தி வீக்கில் லக்ஷ்மி சுப்ரமணியன் எழுதியிருக்கிறார்.

அது மட்டும் அல்ல மேலும் சில சொத்துக்களை விற்பனை செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கிறாராம் விஜய். ஏப்ரல் மாதம் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதால் அதற்கு செலவுக்கு பணம் தேவைப்படும் என்று சொத்துக்களை விற்க ஆரம்பிக்கவில்லையாம். மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு கேஸ் போட்டிருப்பது முக்கிய காரணமாம்.

மேலும் தேர்தலில் போட்டியிடுவதால் சொத்து விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும். அதையும் மனதில் வைத்து தான் அசையா சொத்துக்களை விற்கிறாராம் விஜய். சங்கீதா உடன் சேர்ந்திருந்தால் சில சொத்துக்கள் அவர் பெயரில் இருப்பதாக தேர்தல் ஆணையத்திடம் கணக்கு காட்டலாம். ஆனால் விவாகரத்து கேட்டிருக்கும் நிலையில் அவர் பெயரில் சொத்துக்கள் இருப்பதாக கணக்கு காட்ட முடியாத நிலை என்று லக்ஷ்மி சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

விஜய் சர்ச்சைகள்: அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கி வருகிறார் விஜய். அண்ணாவுக்கு நேரமே சரியில்லை. ஒரு பக்கம் விவாகரத்து வழக்கு, மறுபக்கம் கரூரில் 41 உயிர் போனது குறித்து சி.பி.ஐ. விசாரணை, இதற்கிடையே ஜனநாயகன் படத்தை ரிலீஸ் செய்ய முடியாத நிலை. அவரும் எத்தனையை தான் தாங்குவாரோ தெரியவில்லையே என்று விஜய் ரசிகர்கள் புலம்புகிறார்கள்.

விஜய், சங்கீதாவின் விவாகரத்து வழக்கு அனைவரின் கவனத்தை ஈர்த்ததற்கு முக்கிய காரணம் உள்ளது. ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொண்டு என்னை கொடுமைப்படுத்துகிறார் விஜய் என்று விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்டதால் தான் பெரும் சர்ச்சையானது. பெண்களின் பாதுகாப்பு பற்றி மேடைக்கு மேடை பேசும் அரசியலுக்கு வரும் விஜய் இப்படி தாலி கட்டிய மனைவியை கொடுமைப்படுத்தியிருக்கிறாரே. அது மட்டும் இல்லாமல் நடிகையுடன் தொடர்பு வேறா என்று மக்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அது அவரின் தனிப்பட்ட விஷயம். அதை எல்லாம் பற்றி பேச யாருக்கும் உரிமை இல்லை என்று விஜய் ரசிகர்கள் கூறுகிறார்கள். உங்கள் அண்ணன் நடிகராக மட்டும் இருந்திருந்தால் திருமணத்தை தாண்டிய உறவு என்பது தனிப்பட்ட விஷயம் தான். ஆனால் மக்களை வழிநடத்தும் தலைவராக ஆசைப்பட்டு அரசியலுக்கு வருவதால் இனி அது பர்சனல் என்று சொல்ல முடியாது என்கிறார்கள் சமூக வலைதளவாசிகள்.

இதற்கிடையே சென்சார் போர்டின் ரிவைசிங் கமிட்டி ஜனநாயகன் படத்தை பார்த்துவிட்டது. எப்படியும் சான்று கிடைத்துவிடும் என்று நினைத்தால், அது தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்துவிட்டது. படத்தில் அரசியல் காட்சிகள் இருப்பதாலும், இது தேர்தல் நேரம் என்பதாலும் தேர்தல் ஆணையத்திடம் இருந்து தடையில்லா சான்று பெறுவது முக்கியம் என்று கூறிவிட்டது சென்சார் போர்டு. இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம் கேட்டதற்கு, நான் தேர்தல் ஆணையத்திடம் பேசிவிட்டு சொல்கிறேன் என்றார்.

What's your reaction?

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *