Featured
Featuredஇந்தியாஉலகம்செய்திகள்தமிழகம்

விமான நிலைய ஓடுதளத்தில் கோர விபத்து: தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி பயணிகள் காயம்!

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள லா கார்டியா விமான நிலையத்திற்கு ஏர் கனடா எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று கனடாவின் மாண்ட்ரியல் நகரில் இருந்து இன்று (23.03.2026) வந்தது.

அப்போது இந்த விமானம் லா கார்டியா விமான நிலையத்தின் ஓடுதளம் 4ஐ கடக்க முயன்றது. அச்சமயத்தில் அங்கிருந்த தீயணைப்பு வாகனத்தின் மீது எதிர்பாராத விதமாக திடீரென விமானம் மோதியது.

இந்த விபத்தில் விமானத்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்து, முன் சக்கரம் உடைந்த நிலையில் விமானம் ஓடுதளத்தில் சரிந்து நின்றது. இந்த விபத்தில் 4 தீயணைப்பு வீரர்கள் படுகாயமடைந்திருப்பதாகவும், அவர்கள் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே சமயம். விமானத்தில் இருந்த சுமார் 100 பயணிகளில் பலருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அவர்கள் உடனடியாக விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இந்த விபத்தையடுத்து, அமெரிக்காவின் மத்திய விமான போக்குவரத்து ஆணையம் லா கார்டியா விமான நிலையத்தை உடனடியாக மூடியது. அதோடு, அனைத்து விமானச் சேவைகளுக்கும் தடை விதித்துள்ளது. மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையின் மூலம் கருதப்படுகிறது. மேலும் இது குறித்து தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது. விமானம் தரையிறங்கிய போது ஓடுதளத்தில் இருந்த தீயணைப்பு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

What's your reaction?

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *