“சென்னை உயர் நீதிமன்றம், புதிய வழிகாட்டுதல்கள் வரும்வரை எந்த அரசியல் கட்சிகளுக்கும் ரோடு ஷோ நடத்த அனுமதி வழங்காது என தீர்ப்பு வழங்கியது; அதிமுக இடை மனு தாக்கல் செய்துள்ளது.”

“புதிய வழிகாட்டுதல்கள் வரையில் எந்த அரசியல் கட்சிகளுக்கும் ரோடு ஷோ நடத்த அனுமதி அளிக்கப்படாது என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கடந்த மாதம் 27 ஆம் தேதி, கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களுக்கு அனுமதி வழங்கும் விதிமுறைகள் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்க வேண்டிய தேவையை உச்சநீதிமன்றம் முன் வைத்திருந்தது.
இந்நிலையில், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் அமர்வு இன்று இந்த வழக்கை விசாரித்தனர். விஜய் பரப்புரைக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக தெரிவித்து, தவெக தரப்பில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.”



























