துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம் – பல இடங்களில் அதிர்ச்சி, கட்டடங்கள் சேதம்
அங்காரா: துருக்கியின் மேற்கு பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 எனப் பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தின் மையம் பாலிகேசிர் மாகாணத்தின் சிந்திர்கி நகரம் அருகே, பூமியின் அடியில் சுமார் 6 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிர்வின் தாக்கத்தால் சில பழைய கட்டிடங்கள் சேதமடைந்தன என்றும், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து திறந்த வெளிகளில் தஞ்சம் புகுந்தனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்தான்புல், புர்சா, மனிசா, இஸ்மிர் உள்ளிட்ட பல நகரங்களிலும் அதிர்வுகள் உணரப்பட்டன.
அதிகாரிகள் கூறுகையில், சமீபத்திய நிலநடுக்கத்தில் முன்னர் ஏற்பட்ட அதிர்வால் பலவீனமடைந்த கட்டடங்கள் தற்போது இடிந்து விழுந்துள்ளதாகவும், அதிர்ஷ்டவசமாக எந்த உயிரிழப்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
துருக்கி உள்துறை அமைச்சர் அலி யேர்லிகயா கூறியதாவது:




























