Featured
Featuredஅரசியல்உலகம்செய்திகள்

கேஸ் சிலிண்டரை தொடர்ந்து காத்திருக்கும் அடுத்த அதிர்ச்சி.. நுவாமா நிறுவனம் வெளியிட்ட ஷாக் ரிப்போர்ட்!

கடந்த ஜனவரி மாதத்தில் புதிய கட்டுமானத் திட்டங்கள் 44 விழுக்காடு குறைந்ததாக கூறப்படுகிறது.

ஈரான் போர் காரணமாக இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மறைமுகமாக பல்வேறு பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, கச்சா எண்ணெய்யில் இருந்து எடுக்கப்படும் பெட் கோக், சிமெண்ட் உற்பத்தியில் முக்கிய பங்கு வகித்து வருகிறது.

இந்நிலையில், கச்சா எண்ணெய் விலையேற்றத்தால், இந்தியாவில் இம்மாத இறுதிக்குள் சிமெண்ட் விலை அதிகரிக்கக்கூடும் என நுவாமா என்ற நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த மாதத் தொடக்கத்திலேயே ஒரு சில இடங்களில் சிமெண்ட் விலை அதிகரிக்கப்பட்ட நிலையில், தேவை குறைவுக் காரணமாக, விலையேற்றம் திரும்ப பெறப்பட்டது.

குறிப்பாக, ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்ட சுணக்கம் காரணமாக, கடந்த ஜனவரி மாதத்தில் புதிய கட்டுமானத் திட்டங்கள் 44 விழுக்காடு குறைந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பெட்கோக் விலையேற்றம் காரணமாக, இம்மாத இறுதியில் சிமெண்ட் விலை அதிகரிக்கக்கூடும் என நுவாம் நிறுவனம் கணித்துள்ளது.

What's your reaction?

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *