Featured
Featuredஇந்தியாசுற்றுலாசெய்திகள்தமிழகம்

உழவன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு நாளை முதல் கூடுதல் நிறுத்தம்

சென்னை எழும்பூர்- தஞ்சாவூர் இடையே உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

திருச்சி,

சென்னை எழும்பூர்- தஞ்சாவூர் உழவன் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்கள் 16865,16866), சென்னை எழும்பூர்- மங்களூரு சென்டிரல் (வண்டி எண்கள் 16159, 16160) எக்ஸ்பிரஸ் ஆகிய 2 ரெயில்களும் பரீட்சார்த்த அடிப்படையில் நாளை (மார்ச் 16) முதல் திண்டிவனத்தில் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.

சென்னை எழும்பூர் -தஞ்சாவூர் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் திண்டிவனத்திற்கு நள்ளிரவு 12.13 மணிக்கு வந்து 12.15 மணிக்கு புறப்படும் என்றும் மறு மார்க்கத்தில் அதிகாலை 2.13 மணிக்கு வந்து 2.15 மணிக்கு புறப்படும் என்றும் ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதேபோல, சென்னை எழும்பூர்- மங் களூரு சென்டிரல் எக்ஸ்பிரஸ் ரெயில் நள்ளிரவு 12.58 மணிக்கு வந்து 1 மணிக்கு புறப்படும் என்றும் மறு மார்க்கத்தில் 1.15 மணிக்கு வந்து 1.17 மணிக்கு புறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் தெரிவித்து உள்ளார்.

What's your reaction?

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *