Featured
Featuredகல்விசெய்திகள்தமிழகம்

போதை கெத்தல்ல… அது வெறும் சாவு! பள்ளி குழந்தைகளுக்குப் புரிய வைக்க வேண்டிய ‘ரியல்’ மாஸ் இதுதான்

திரைப்படம் காட்டும் தவறான உலகம் படங்களில் hero குடிக்கும்போது அது கவர்ச்சியாக காட்டப்படுகிறது. குடிக்கிறவனுக்குத்தான், குடிக்கிறவளுக்குத்தான் எல்லோரும் விரும்புகிறார்கள் என்ற தவறான எண்ணம் மனதில் ஆழமாக பதிந்து விடுகிறது.

மனநல ஆலோசகர் விளக்கம்

School Uniform-லேயே குடிக்கிறார்கள்… இது கெத்தா? சமீபத்தில் சில வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகின. School uniform போட்ட சிறுவர்கள், சிறுமிகள் குழுவாக அமர்ந்து குடிக்கிறார்கள். பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சி. ஆனால் அவர்களுக்கோ அது கெத்து. இந்த ஒரு வார்த்தையில்தான் இன்றைய பெரிய பிரச்சனை இருக்கிறது. குடிப்பது கெத்து என்று நினைக்கிறார்கள். இன்றைய பல சிறுவர்கள், சிறுமிகள் மனதில் ஒரு நம்பிக்கை உள்ளது. குடிக்கத் தெரிந்தவன், குடிக்கத் தெரிந்தவள் கெத்தானவர்கள், அவர்களுக்குத்தான் நண்பர்கள் கிடைப்பார்கள், மரியாதை கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். இது எங்கிருந்து வருகிறது? மதுரையைச் சேர்ந்த மனநல ஆலோசகர் ப.ராஜசெளந்தர பாண்டியன் கொடுத்த முழுமையான விளக்கம்.

குடிப்பது அந்த கூட்டத்திற்கான நுழைவு அனுமதியாகிவிடுகிறது

“கூட்டத்தில் தனியாக தெரிய விரும்புவதில்லை இந்த வயதில் நான் எந்த கூட்டத்தில் இருக்கிறேன் என்பது மிகவும் முக்கியமாக தெரியும். தனியாக இருப்பதை விட தப்பான கூட்டத்தில் சேர்வதே பரவாயில்லை என்று நினைப்பார்கள். குடிப்பது அந்த கூட்டத்திற்கான நுழைவு அனுமதியாகிவிடுகிறது. சிறுவர்களுக்கும் சரி, சிறுமிகளுக்கும் சரி, இந்த அழுத்தம் சமமாக இருக்கிறது. மறுத்தால் கேலி செய்வார்களே என்ற பயம் நீயும் குடி, இல்லன்னா நீ பயந்தாங்கொள்ளி என்ற வார்த்தைகள் சிறுவனையும் சிறுமியையும் உள்ளுக்குள் ஆட்டிவைக்கும். மறுத்தால் கேலி செய்வார்கள், கூட்டத்தில் இருந்து விலக்கிவிடுவார்கள் என்ற பயம் அவர்களை தப்பான வழியில் இழுத்துச் செல்கிறது. திரைப்படம் காட்டும் தவறான உலகம் படங்களில் hero குடிக்கும்போது அது கவர்ச்சியாக காட்டப்படுகிறது. குடிக்கிறவனுக்குத்தான், குடிக்கிறவளுக்குத்தான் எல்லோரும் விரும்புகிறார்கள் என்ற தவறான எண்ணம் மனதில் ஆழமாக பதிந்து விடுகிறது.

உடம்புக்கு என்ன ஆகுது?
இது வெறும் நல்லது கெட்டது பிரச்சனை மட்டுமல்ல. குழந்தை வயதில் குடிக்கும் போது சரியான முடிவு எடுக்கும் திறன் குறைந்துவிடும். இது தப்பு என்று உணர்வே போய்விடும். நினைவாற்றலை பாதிக்கும். பெரியவர்களாகும் போது அதை விட முடியாமல் போகும். சில நிமிட நல்லா இருக்கு என்ற உணர்வுக்காக வாழ்க்கையே மாறிவிடும்.

பெற்றோர்கள் என்ன செய்யலாம்?
தண்டனை மட்டுமே தீர்வல்ல. கோபமில்லாமல் பேசுங்கள். நீ ஏன் இப்படி செய்தாய் என்று அல்ல, உனக்கு என்ன நடக்குதுன்னு சொல்லு என்று கேளுங்கள். உண்மையான கெத்தை புரியவையுங்கள். “இல்லை” என் சொல்லத் தெரிந்தவர்கள்தான் தைரியசாலிகள் என்று சொல்லுங்கள். பத்து பதினொரு வயதிலேயே இந்த உரையாடலை ஆரம்பியுங்கள். தாமதிக்காதீர்கள். கடைசியாக ஒரு வார்த்தை குடி என்று சொல்வது யாராயிருந்தாலும், கூட இருக்கும் நண்பனா இருந்தாலும், நெருங்கிய தெரிந்தவராக இருந்தாலும், வேண்டாம் என்று சொல்லத் தெரிந்தவர்கள்தான் உண்மையான தைரியசாலிகள். அந்த ஒரு வார்த்தை சொல்ல தெரிந்தவர்கள்தான் உண்மையான கெத்து.

What's your reaction?

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *