தெஹ்ரான்: வளைகுடா பிராந்தியத்தில் போர் மேகங்கள் இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. எப்போது வேண்டும் என்றாலும் அங்குப் போர் மீண்டும் வெடிக்கலாம் என்ற சூழலே இருக்கிறது.
இதற்கிடையே ஒட்டுமொத்த ஹார்முஸும் ரத்த நிறத்தில் மாறிய வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இது குறித்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
கடந்த சில நாட்களாக ஹார்முஸ் முழுக்க ரத்த ஆறு ஓடுவது போன்ற வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இந்த ‘சிவப்பு நிறக் கடல்’ வீடியோ நெட்டிசன்களை ஒரு நிமிடம் அதிர வைத்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) அமெரிக்கா – ஈரான் மோதல் உச்சக்கட்டத்தில் இருப்பதால், இது போரினால் ஏற்பட்ட ரத்த ஆறோ எனப் பலரும் அச்சமடைந்துள்ளனர். ஆனால், உண்மை வேறு விதமானது. இது தொடர்பாக நாம் விரிவாக பார்க்கலாம்!
ஹார்முஸ்
ஹார்முஸ் ஜலசந்திப் பகுதியில் அமெரிக்கா- இஸ்ரேல் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடுமையான போர் நிலவி வந்தது. இப்போது தான் சில நாட்களாகத் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. அதுவும் கூட எப்போது வேண்டும் என்றாலும் முறிந்து போகலாம் என்ற சூழலே நிலவுகிறது. அமெரிக்கா அங்குள்ள கண்ணிவெடிகளை அகற்றி வரும் நிலையில், ஈரான் தனது கடல் எல்லைகளைக் காக்க ராணுவத்தைக் குவித்து வருகிறது. இதனால் அங்குப் பதற்றம் தொடர்ந்தே வருகிறது.





























