Featured
Featuredஅரசியல்இந்தியாஉலகம்செய்திகள்

மேற்காசிய போர் பதற்றம்; 11 நாடுகளின் வான்வழியைத் தவிர்க்க இந்திய விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்

புதுடில்லி: மேற்காசியாவில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, ஈரான், சவுதி அரேபியா, யுஏஇ உள்பட 11 நாடுகளின் வான்வழியைத் தவிர்க்குமாறு இந்திய விமான நிறுவனங்களுக்கு விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 28ம் தேதி தொடங்கிய அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. வளைகுடா நாடுகளில் ஈரான் டிரோன் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, துபாய், ஓமன் போன்ற நாடுகளின் சர்வதேச விமான நிலையங்களின் அருகே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சிவில் விமானப் போக்குவரத்து பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போதைய போர் காரணமாக,11 நாடுகளின் வான்வழியை பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு இந்திய விமான நிறுவனங்களுக்கு விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு கருதி, ஈரான், இஸ்ரேல், லெபனான், சவுதி அரேபியா, பஹ்ரைன், ஓமன், ஈராக், ஜோர்டான், யுஏஇ , கத்தார் மற்றும் குவைத் உள்ளிட்ட நாடுகளின் வான்வழியை மார்ச் 28ம் தேதி வரை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *